சொந்த ஊர் திரும்பிய மக்களால் கூட்ட நெரிசல்
அரூர்:அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர், சென்னை, ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலுள்ள கல்லுாரிகளில் படிக்கின்றனர். ஏராளமானோர் வெளியிடங்களில், அரசு, தனியார் நிறுவனங்களிலும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் பணி செய்கின்றனர். இந்நிலையில் பள்ளி காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமிக்கு தொடர் விடுமுறையால் நேற்று, வெளியூர்களுக்கு கூலிவேலைக்கு சென்றிருந்த தொழிலாளர்கள் மற்றும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால், அரூர் பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது.