மேலும் செய்திகள்
துணிக்கடை கூரையை உடைத்து ரூ.1.95 லட்சம் திருட்டு
06-Jan-2025
தர்மபுரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளியூரிலுள்ள மக்கள் சொந்த ஊர் திரும்பி வருவதால், தர்மபுரி பஸ் ஸ்டாண்டிலும் மற்றும் பொங்கல் பொருட்களை வாங்க வரும் மக்களால், கடை-வீதிகளிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. தமிழகம் முழுவதும் தமிழர்களின் அறுவடை திருவிழாவான, பொங்கல் பண்டிகை இன்று முதல் கோலாகலமாக கொண்டாடப்-படுகிறது. தர்மபுரி மாவட்டம் அதிகளவில் கிராமங்களை உள்ளடக்கியது. இதில், பண்டிகை நாட்களில் புத்தாடைகள் வாங்க, தர்மபுரி டவுன் பகுதிக்கு மக்கள் வந்து செல்கின்றனர்.மேலும், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, வேலை தேடி வெளியூர் சென்றவர்கள், பொங்கல் பண்டிகைக்காக பஸ், ரயில்கள் மூலம், சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், புத்தா-டைகள் வாங்க, பொதுமக்கள் கடைவீதியில் குவிந்தனர். தர்ம-புரி டவுன் பஸ் ஸ்டாண்டை ஒட்டிய ஆறுமுக ஆச்சாரி தெரு, சின்னசாமி நாயுடு தெரு, சித்த வீரப்ப செட்டி தெரு, முகமதலி கிளப் ரோடு, நேதாஜி பைபாஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் வாகன நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. இதில், சிறிய கடைகள் முதல் பெரிய அளவிலான ஜவுளிக்கடைகள் வரை அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தர்மபுரி டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
06-Jan-2025