உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மதகு உடைப்பு: போலீசில் புகார்

மதகு உடைப்பு: போலீசில் புகார்

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், மிட்டாரெட்டிஹள்ளி பஞ்., கோம்பேரி ஏரி, 33 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது, 20 ஆண்டுக்கு பின், கடந்த வாரம் நிரம்பி, ஒரு வாரமாக உபரிநீர் வெளியேறி வருகிறது. நேற்று காலை ஏரியிலிருந்து, உபரி நீர் அதிகமாக வெளியேறியதை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு சென்று பார்த்தபோது, உபரி நீர் வெளியேறும் மதகை மர்ம கும்பல் உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது. இது குறித்து, மிட்டாரெட்டிஹள்ளி வி.ஏ.ஓ., ரூபிராஜன் புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை