உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில் மாசன் ஏரி உள்ளது. இதில் மீன் பிடிப்பதற்காக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், டைனமோ வெடிகளை வீசியுள்ளனர். இதனால் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதுடன், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் ஏரியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக புகார் கூறும் பொதுமக்கள், டைனமோ வெடிகளை வீசி மீன்பிடிப்பவர்கள் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ