தடுப்பணை கட்ட கோரிக்கை
தடுப்பணை கட்ட கோரிக்கைஅரூர், நவ. 8- அரூர் அடுத்த நரிப்பள்ளி அருகே, காட்டாறு செல்கிறது. மழைக்காலங்களில் வனப்பகுதிகளில் இருந்து வரும் நீரால், இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக செல்கிறது. இதை தடுக்க, காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட, கடந்த, 25 ஆண்டுகளுக்கு மேலாக, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காட்டாற்றின் குறுக்கே, தடுப்பணை கட்டுவதன் மூலம், நரிப்பள்ளி, பெரியப்பட்டி ஆகிய, 2 பஞ்.,க்கு உட்பட்ட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே, காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.