உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாலையோர கடைகளை ஒழுங்குபடுத்த கோரிக்கை

சாலையோர கடைகளை ஒழுங்குபடுத்த கோரிக்கை

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூரில், திங்கட்கிழ-மையில் வாரச்சந்தை நடக்கிறது. கடைவீதியிலிருந்து, பழையபேட்டை வாணியாறு பாலம் வரை, நடைபாதைகளில் தள்ளுவண்டி கடைகள், காய்கறி கடைகள் என, சிறு வியாபா-ரிகள் பலர் ஆக்கிரமித்து கொள்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், எந்நேரமும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுவதுடன், பொதுமக்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்கு ஆளாகின்-றனர். எனவே, சாலையோர கடைகளை ஒழுங்கு-படுத்துவதுடன், சந்தைக்கு ஒதுக்கிய இடத்தில் கடைகளை வைக்க நகராட்சி நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை