ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
கரூர், ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழநாடு அரசு சார்பில், அன்புகரங்கள் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, ஆதரவற்ற குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் ( குழந்தைகளில் பெற்றோர் மாற்றுத்திறனாளி, சிறையில், நோய்ப்பட்டு இருந்தல்) ஆகியோர் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அவர்களின் ஆதார், குழந்தையின் வயது சான்று நகல், வங்கி கணக்கு புத்தகத்துடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.