உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

தர்மபுரி:புரட்டாசி மாதத்தின், 2வது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பழைய தர்மபுரி அடுத்த, வரதகுப்பம் வெங்கட்ரமண சுவாமி, வெள்ளி கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதேபோல், தர்மபுரி அருகே மூக்கனுார் ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி தங்கக்கவச அலங்காரத்திலும், லளிகம் சென்றாய பெருமாள் சந்தனக்காப்பு அலங்கரத்திலும் என, மாவட்டத்திலுள்ள பெருமாள் கோவில்களில், மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.* அரூர் பழையபேட்டை கரியபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதேபோல், மொரப்பூர் சென்னகேசவ மற்றும் வரதராஜ பெருமாள் கோவில், எம்.வெளாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ட ரமண பெருமாள் கோவில் மற்றும் மருதிப்பட்டி, பெத்துார், கொங்கவேம்பு உள்ளிட்ட இடங்களிலுள்ள பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அரூரில் பூ மாலைகளின் விலை அதிகரித்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. அரூர் கடைவீதியில், பூக்கள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால், அதன் விற்பனை ஜோராக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை