மேலும் செய்திகள்
4 வழித்தடங்களில் அரசு பஸ் சேவை நீட்டிப்பு
15-Oct-2025
தர்மபுரி, தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஒரு வாரமாக பரபரப்பாக காணப்பட்ட தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சேலம், கோவை, ஈரோடு, சென்னை போன்ற வெளி மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சென்றுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வேலைக்கு சென்றவர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்பினர். இதன் காரணமாக, அக்., 14 முதல், ரயில் மற்றும் பஸ்கள் மூலம், தர்மபுரி மாவட்டத்திற்கு மக்கள் வரத் தொடங்கியதால், அன்று முதல் தர்மபுரி ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்ட்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து, பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.கடந்த ஒரு வாரமாக, தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பஸ் ஸ்டாண்ட் பரபரப்பாக காணப்பட்ட நிலையில், நேற்று தீபாவளி பண்டிகையை மக்கள் அவரவர் வீடுகளில் கொண்டாடியதால், பயணிகள் கூட்டமின்றி பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்பட்டது.
15-Oct-2025