உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரியில் 92.71 சதவீதம் தேர்ச்சி

தர்மபுரியில் 92.71 சதவீதம் தேர்ச்சி

தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், இந்தாண்டு, 177 பள்ளிகளில் படித்த மாணவர்கள், 18,937 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதியிருந்தனர். நேற்று வெளியான தேர்வு முடிவில், 8,328 மாணவர், 9,228 மாணவியர் என, மொத்தம், 17,556 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், 90.58, மாணவியரின் தேர்ச்சி சதவீதம், 94.71, மொத்த தேர்ச்சி சதவீதம், 92.71. மாநில அளவில், தர்மபுரி மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் கடந்தாண்டு, 23வது இடத்தில் இருந்தது. இந்தாண்டு முன்னேறி, 17வது இடத்துக்கு சென்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை