உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளியின் ஆண்டு விழா

தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளியின் ஆண்டு விழா

தர்மபுரி: தர்மபுரி- - பென்னாகரம் சாலையிலுள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.இதில், விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி., இளங்கோவன் தலைமை வகித்தார். தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குனர்கள் பிரேம், சினேகா பிரவின், தலைமை செயல்பாட்டு அலுவலர் சந்திரபானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஜெயசீலன் ஆண்டறிக்கை வாசித்தார்.இதில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ், மாநில மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு வழங்கி பாராட்டி பேசினார். அதேபோல், முதன்மை மாவட்ட நீதிபதி திருமகள், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம், விஜய்ஸ் ஏஸ் அகாடமியில் படித்து, பட்டய கணக்கர், நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். விழாவல், 950 மாணவ, மாணவியர் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில், பள்ளியின் மூத்த முதல்வர் நாராயணமூர்த்தி, நீட் ஒருங்கிணைப்பாளர் கல்யாண் பாபு உள்ளிட்ட பள்ளி நிர்வாக அலுவலர்கள், முதல்வர்கள், துணை முதல்வர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ