குடற்புழு நீக்க தினம் அதியமான்கோட்டை:
தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமையில் நடந்தது. இதில், வட்டார மருத்-துவ அலவலர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.* கடத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வட்டாரத்தி-லுள்ள மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடந்தது. கடத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அரசு, வழிகாட்டுதலின்படி சமுதாய சுகாதார செவிலியர் மலர்விழி தலைமையில், குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்-பட்டது. நிகழ்ச்சியில், கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகா-தார செவிலியர்கள் கலந்து கொண்டனர். இதே போன்று பாப்பி-ரெட்டிப்பட்டி வட்டாரத்திலும் நடந்தது. விடுபட்டவர்களுக்கு வரும், 17ல் வழங்கப்படுகிறது.