உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாற்றுத்திறனாளிகள் குறைதீர்் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்் கூட்டம்

அரூர், அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம், ஒவ்வொரு மாதமும், 2வது செவ்வாய்க்கிழமை நடக்கிறது. அதன்படி நேற்று அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., சின்னுசாமி தலைமையில் கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, தாசில்தார்கள் அரூர் பெருமாள், பாப்பிரெட்டிப்பட்டி செந்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை திட்ட அலுவலர் வாசுதேவன், வேளாண் துறை உதவி இயக்குனர் இளங்கோ மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் இலவச வீட்டுமனை பட்டா, வீடு, வங்கிகடன், அடையாள அட்டை உள்ளிட்டவைகள் கோரி மனுக்கள் அளித்தனர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ., சின்னுசாமி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், செயற்கை கை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை