உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காவிரி உபரிநீர் திட்டம் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்; மா.கம்யூ.,

காவிரி உபரிநீர் திட்டம் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்; மா.கம்யூ.,

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட, மா.கம்யூ., செயலாளர் சிசுபாலன் வெளியிட்-டுள்ள அறிக்கை: மக்கள் நலத்திட்டங்களை வழங்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்திற்கு நேற்று வந்தி-ருந்தார். பயனாளிகளுக்கு முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கி-யதுடன், பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். இதில், புளி விளைச்சல் அதிகம் உள்ள, இம்மாவட்டத்தில் புளி வணிக மையம். ஆட்டுக்காரம்பட்டி- பென்-னாகரம் நான்கு வழிச்சாலை, அரூர் நகருக்கு வள்ளிமதுரை அணை குடிநீர் திட்ட விரிவாக்கம், பரிகம்- மலையூர்காடு வனச்-சாலை ஆகிய அறிவிப்புகளை வரவேற்கிறோம்.அதேசமயம், வானம் பார்த்த பூமியாக உள்ள, தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, காவிரி உபரி நீர் திட்டம் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியான இத்திட்டத்தையும், சிப்காட் தொழிற்பேட்டையையும் உடனடி-யாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை