மேலும் செய்திகள்
மனுநீதி நாளில் ரூ.31 லட்சம் உதவி
12-Sep-2024
ரூ.-84.18 லட்சம் நலத்திட்ட உதவி167 பயனாளிகளுக்கு வழங்கல்தர்மபுரி, அக். 10-தர்மபுரி மாவட்டம், மிட்டாநுாலஹள்ளியில், மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, தி.மு.க., - எம்.பி., மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வருவாய்த்துறை சார்பில், 56 பயனாளர்களுக்கு, 26.88 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், 8 பயனாளிகளுக்கு, 98,400 ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், 29 பயனாளிகளுக்கு, 3.60 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டுறவுத்துறையின் சார்பில், 25 விவசாயிகளுக்கு, 19.32 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிர்கடன் வழங்கப்பட்டது.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், நான்கு விவசாயிகளுக்கு, 1.22 லட்சம் மதிப்பில் சொட்டுநீர் பாசனம் அமைத்தல் மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 2 விவசாயிகளுக்கு, 1.61 லட்சம் ரூபாய் என மொத்தம், 167 விசாயிகளுக்கு, 84.18 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
12-Sep-2024