உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளி மாணவர்களுக்கு 2ம் பருவ பாட புத்தகங்கள் வினியோகம்

பள்ளி மாணவர்களுக்கு 2ம் பருவ பாட புத்தகங்கள் வினியோகம்

அரூர், அரூர் தொடக்கக் கல்வி மாவட்டத்தில், 517 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், 2ம் பருவத்திற்கான இலவச பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் பள்ளி திறப்பின் முதல் நாளிலேயே வினியோகம் செய்யப்பட்டது.தர்மபுரி மாவட்டம், அரூர் தொடக்கக் கல்வி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கடத்துார், காரிமங்கலம் ஆகிய, 5 ஒன்றியங்கள் உள்ளன. இதில், 363 தொடக்கப்பள்ளிகள், 117 நடுநிலைப் பள்ளிகள், 17 அரசு உண்டு உறைவிட தொடக்கப் பள்ளிகள் உட்பட, 517 பள்ளிகள் இயங்கி வருகின்றன. கல்வி மாவட்டத்தில், 2025--2026ம் கல்வியாண்டிற்கான, 1 முதல், 8ம் வகுப்பு வரை பயிலும், 25,830 மாணவர்களுக்கு, 2ம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் ஒன்றியங்கள் வாரியாக வாகனங்கள் மூலமாக, கடந்த சில நாட்களாக அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது. இதற்கான பணிகள் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் விஜயகுமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, காலாண்டு விடுமுறைக்கு பின், முதல் நாளான நேற்று முன்தினம், அரசின் உத்தரவின் படி, அரூர் ஒன்றியத்தில், 7,880, கடத்துார் ஒன்றியத்தில், 3,420, மொரப்பூர் ஒன்றியத்தில், 2,940, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், 4,060, காரிமங்கலம் ஒன்றியத்தில், 7,530 என மொத்தமாக, 25,830 மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை