உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டி

மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டி

தர்மபுரி, மாவட்ட அளவிலான தடகள போட்டி வரும், 24 அன்று நடக்கவுள்ள நிலையில், மாவட்ட தடகள கழகத்தின் செயலாளர் அறிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்ட அளவில், இளையோர் தடகள போட்டி ஜூலை, 24 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்கவுள்ளது. இதில், கலந்து கொண்டு வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தேர்ந்தெடுக்கப்படும் வீரர் வீராங்கனைகள் செப்., 19 முதல், 21 வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்படுவர். இதில், 14 முதல், 20 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு நீளம், உயரம் தாண்டுதல், சாட் புட், 100 முதல், 1,500 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடக்க உள்ளது. இதில், ஜூலை, 24 அன்று காலை, 7:00 மணிக்கு போட்டி துவங்கும் முன், விளையாட்டு மைதானத்தில் பெயர் பதிவு செய்து, செஸ் நம்பர் வழங்கப்படும். நுழைவு கட்டணம் இல்லை. மேலும் விபரங்களுக்கு, 94422 07047 94432 66228 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை