மேலும் செய்திகள்
அ.தி.மு.க., ஆண்டு விழா நலத்திட்ட உதவி வழங்கல்
18-Oct-2024
கிருஷ்ணகிரி: தே.மு.தி.க., சார்பில், விஜயகாந்தின், 72வது பிறந்த நாள் விழா, கட்சியின், 20ம் ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என, நேற்று மாலை முப்பெரும் விழா, காவேரிப்-பட்டணம் பஸ் ஸ்டாண்டில் நடந்தது. ஒன்றிய செயலாளர் விஜய்வல்லரசு வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் சின்னராஜி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சங்கர், துணைத்தலைவர் முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். விழாவில், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேம-லதா, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில், அவைத்தலைவர் இளங்கோவன், மாணவரணி துணை செயலாளர் பம்பல்ராஜ், விவசாய அணி துணை தலைவர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர்கள் முரு-கேசன், ராமசாமி ரெட்டி, குமார், சங்கர், ஹரிகி-ருஷ்ணன், மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்-டனர்.
18-Oct-2024