உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தே.மு.தி.க., நிர்வாகிகள் கூட்டம்

தே.மு.தி.க., நிர்வாகிகள் கூட்டம்

தர்மபுரி: தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட, தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர்கள் கிழக்கு குமார், மேற்கு விஜயசங்கர் தலைமை வகித்தனர். நகர செயலாளர் சுரேஷ் வர-வேற்றார். மாநில தொழிற்சங்க துணைத்தலைவர் விஜய்வெங்-கடேஷ் மற்றும் மாநில அவைத்தலைவர் இளங்கோவன் தீர்மா-னங்கள் குறித்து விளக்கினர். வரும் ஏப்., மாதம் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடத்துவது, மார்ச், 18ல் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடுவது, அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.,கவுக்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்பது உட்-பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ