உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தி.மு.க., சார்பில் ஓமலுாரில் மக்கள் சந்திப்பு கூட்டம்

தி.மு.க., சார்பில் ஓமலுாரில் மக்கள் சந்திப்பு கூட்டம்

ஓமலுார், வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என, மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரன் பேசினார்.சேலம் மத்திய மாவட்டத்துக்குட்பட்ட ஓமலுார் சட்டசபை தொகுதியில், மாவட்ட செயலரான, அமைச்சர் ராஜேந்திரன் மக்கள் சந்திப்பு முகாம் நடத்தி வருகிறார். நேற்று மாலை, ஓமலுார் டவுன் பஞ்., பகுதியில் பூங்கா அருகே, செவ்வாய்சந்தை, சிவியர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றார். அதில், மகளிர் உரிமைத்தொகை, இலவச பஸ் பயணம், வீடு தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களை எடுத்துரைத்து பேசினார். பெண்களுக்கான ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின், மீண்டும் முதல்வராக வர அனைவரும் உதய சூரியனுக்கு ஓட்டு போட வேண்டும் என்றார்.தொகுதி பார்வையாளர் சுகவனம், மத்திய மாவட்ட பொருளாளர் கார்த்தி, ஓமலுார் ஒன்றிய செயலர் ரமேஷ், நகர செயலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை