உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தி.மு.க.,வினர் ரத்த தானம்

தி.மு.க.,வினர் ரத்த தானம்

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி வடசந்தையூர் அரசு தொடக்கப் பள்ளியில், தி.மு.க., முப்பெரும் விழாவையொட்டி ரத்ததான முகாம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடந்தது. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்யமூர்த்தி முன்னிலை வகித்தார். தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாமில் இளைஞரணியை சேர்ந்த, 30 பேர் ரத்த தானம் செய்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவுரிசங்கர், டாக்டர் சுதா, சுகாதார ஆய்வாளர்கள் யாரப் பாஷா, நவநீத கிருஷ்ணன் மற்றும் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர் குழுவினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை