நல்லம்பள்ளியில் தி.மு.க., செயற்குழு கூட்டம்
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் மத்திய ஒன்றிய தி.மு.க., செயற்குழு கூட்டம், மத்திய ஒன்றிய செயலர் மல்லமுத்து தலை-மையில் நடந்தது.இதில், நல்லம்பள்ளி மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து பஞ்.,களிலும், துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, கட்சி கொடியேற்றிட வேண்டும். மக்களுக்கு இனிப்பு வழங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் படிக்கும் பள்ளிகளுக்கு சென்று, அவர்களுக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன. மத்திய ஒன்றிய அவைத்தலைவர் மணி, துணை செயலர்கள் தேவராசன், வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்