மேலும் செய்திகள்
தி . மு . க ., பொதுக்கூட்டம்
24-Mar-2025
பென்னாகரம்: தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., இளைஞரணி சார்பில், மத்திய அரசை கண்டித்து, நேற்று முன்தினம் இரவு, பொதுக்கூட்டம் நடந்தது.பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த கூட்டத்திற்கு, தி.மு.க., மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ்வரன் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர் கார்த்திக் வரவேற்றார். தலைமை பேச்சாளர்கள் ரவீந்திரன், யோகஸ்ரீ, தர்மபுரி எம்.பி.,யும் கிழக்கு மாவட்டச் செயலாளருமான மணி, முன்ளாள் எம்.எல்.ஏ., இன்பசேகரன் உள்ளிட்டோர் மத்திய அரசை கண்டித்து பேசினர். இதில், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் தர்மசெல்வன், மாஜி மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர்கள் மடம் முருகேசன், செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கெண்டனர்.
24-Mar-2025