தர்மபுரியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்தர்மபுரி, நவ. 15-சென்னை கிண்டியிலுள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில், பணியிலிருந்த ஒரு டாக்டரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியதை கண்டித்து தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தர்மபுரி அரசு மருத்துவமனையில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நடத்திய இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு டாக்டர் சங்க மாநில செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க, தர்மபுரி மாவட்ட செயலாளர் முருகன், டாக்டர்கள் இளவரசன், அரவிந்த், பாலசுப்ரமணியம் மற்றும் ஐ.எம்..ஏ., தலைவர் டாக்டர் இளங்கோவன் மற்றும் செயலாளர் சண்முகப்பிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.