உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விளையாட்டு மைதானத்தில் நாய்களால் தொல்லை

விளையாட்டு மைதானத்தில் நாய்களால் தொல்லை

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், கடந்த, 2010ல், 39.50 லட்சம் ரூபாய் மதிப்பில், சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது.இதில் காலை, மாலையில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.மேலும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் கிரிக்கெட், வாலிபால், கைப்பந்து, ஓட்டம் என ஏராளமான விளையாட்டுகளுக்காக பயிற்சி மேற்கொள்கின்றனர்.ஆனால், விளையாட்டு அரங்கில் வட்டமடிக்கும் நாய்கள், திடீரென குறுக்கும், நெடுக்கும் ஓடுவதால், நடை பயிற்சி மேற்கொள்ள வருபவர்கள், பீதியுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !