உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளி மேலாண்மை குழு தேர்தல்

பள்ளி மேலாண்மை குழு தேர்தல்

பாப்பிரெட்டிப்பட்டி, செப். 20---கடத்துார் அடுத்த கேத்துரெட்டிப்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு தேர்தல் இரு முறை நடந்தது. தகராறு காரணமாக நிறுத்தப்பட்டது. நேற்று, 3வது முறையாக இத்தேர்தல் அப் பள்ளியில் அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர், தலைமையில், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் முன்னிலையில் விதிமுறைகள் படி நடத்தப்பட்டது. இதில் பட்டதாரி ஆசிரியர்கள் ஸ்ரீதர், உஷா நடராஜன், ராமமூர்த்தி, பி.டி.ஏ., தலைவர் சபரி, வனக்குழு தலைவர் தருமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெற்றோர், 18 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ரோஜா தலைவராகவும், நிஷாந்தி துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். பின் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி