யானைகளால் அவரை தோட்டம் நாசம்
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம் ஆலஹள்ளி காப்புக்காட்டில், 4 யானைகள் தனித்தனியாக முகாமிட்டுள்ளன. இரவில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.இதேபோல், ஜவளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட தேவர்பெட்டா காப்புக்காட்டிலிருந்து நேற்று முன்தினம் இரவு வெளியேறிய, 3 யானைகள், ஒட்டர்பாளையம் கிராமத்திற்குள் புகுந்தன. அவற்றை விரட்ட வந்த வனத்துறையினர் ஜீப்பை தாக்குவது போல், அதன் அருகே யானைகள் சென்றன.வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டியதால், லோகேஷ் என்பவரது அவரை தோட்டத்தின் வழியாக யானைகள் சென்றதில், சாகுபடி செய்திருந்த அவரை செடிகள் நாசமாகின.