உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சுற்றுச்சூழல் சவால்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சுற்றுச்சூழல் சவால்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தர்மபுரி: தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில், கல்லுாரி மாணவ, மாணவியருக்கு சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் கழிவு மேலாண்மை மீள்திறன் நடைமுறை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தர்மபுரி காலநிலை மாற்ற இயக்கம், தர்மபுரி வனக்கோட்டம் மற்றும் அரசு கலைக்கல்லுாரி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, வனச்சரக அலுவலர் பெரியண்ணன் தலைமை வகித்தார். உதவிப் பேராசிரியர் பிரபாகரன், சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் கழிவு மேலாண்மை மீள் திறன் நடைமுறைகள் குறித்து விளக்கி பேசினார்.தர்மபுரி பசுமை இயக்கம் கலைவாணி பிரியா, அரசு கலைக்கல்லுாரி முதல்வர் கண்ணன், தாவரவியல் துறைத்தலைவர் வித்யா, வனவர்கள் அசோகன், சங்கர், தாவரவியல், விலங்கியல் துறை மாணவர்கள் மற்றும் வனப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !