இ.ஆர்.கே., கல்லுாரி மாணவியர் பல்கலைக்கழக தேர்வில் சிறப்பிடம்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எருமியாம்பட்டியிலுள்ள இ.ஆர்.கே., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவியர், 2025 ஏப்., மே மாதத்தில் நடந்த பெரியார் பல்கலைக்கழக தேர்வில் புள்ளியியல் பாடத்தில், 18 மாணவியர் சதம் எடுத்து, சாதனை படைத்துள்ளனர். இத்தேர்வில், தமிழ் பாடத்தில், 98.9 சதவீதம், ஆங்கிலத்தில், 97 சதவீதம், விலங்கியல், 98.2 சத-வீதம், கணிதம், 97.2 சதவீதம், வேதியியல், 95.8 சதவீதம், இயற்பியல், 96.8 சதவீதம், வணிகவியல், 97.1 சதவீதம், தாவர-வியல், 95.8 சதவீதம், கணினி அறிவியல் பாடத்தில், 97.4 சதவீ-தமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இறுதியாண்டு பயின்ற இளங்கலை மற்றும் முதுகலை மாணவியர் முறையே, 97 மற்றும் 92.3 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இ.ஆர்.கே., கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்-வராஜ், பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு, இ.ஆர்.கே., கல்வி அறக்கட்டளையின் உதவித்-தொகை வழங்கப்படும் எனவும், 2025 - 26ம் கல்வி ஆண்டிற்-கான அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவிற்-கான சேர்க்கை நடக்கிறது எனவும் அவர் தெரிவித்தார். வெற்றி பெற்ற மாணவியரை, கல்லுாரி நிர்வாக இயக்குனர் சோழ-வேந்தன், முதல்வர் முனைவர் சக்தி, நிர்வாக அலுவலர் அருள்-குமார், அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவியரை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.