உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்பூசணி விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை

தர்பூசணி விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை

அரூர்:தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில், 250க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், தர்பூசணி விலை வீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: கடந்தாண்டு, ஒரு டன் தர்பூசணி, 25,000 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், நடப்பாண்டு, பல இடங்களில் விவசாயிகள் ஆர்வத்துடன் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். தர்பூசணியில் பல வகைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது கிரேன் எனப்படும் ரகம். எந்த பருவத்திலும் விளையும், 60 நாட்களில் மகசூல் தரக்கூடியது. ஏக்கருக்கு, 50,000 ரூபாய் வரை செலவாகி உள்ளது. இந்தாண்டு, கிரேன் தர்பூசணி நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. தற்போது, டன் ஒன்றுக்கு, 3,000 ரூபாய் முதல், 4,000 ரூபாய் வரை தான் விற்கப்படுகிறது. அந்த விலை கொடுத்து வாங்குவதற்கும் வியாபாரிகள் யாரும் வராததால், தர்பூசணி பழங்கள் அறுவடை செய்யப்படாமல் வயலில் தேக்கமடைந்துள்ளன. இதனால், கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ