உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள்

கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள்

தர்மபுரி:இண்டூர் அருகே, நிலத்தகராறில் விவசாயியை கொன்றவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள கூலிக்கொட்டாயை சேர்ந்த விவசாயிகள் துரைசாமி, 53, மற்றும் கிருஷ்ணன், 61. இருவருக்கும் நிலம், வழிப்பாதை தொடர்பாக தகராறு இருந்தது. கடந்த, 2018 அக்., 11 அன்று துரைசாமி, தன் விவசாய நிலத்திற்கு சென்றபோது, அங்கு வந்த கிருஷ்ணன், கத்தியால் குத்தியதில் துரைசாமி உயிரிழந்தார். இண்டூர் போலீசார் கிருஷ்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு, தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவில் குற்றச்சாட்டு உறுதியானதால், கிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை மற்றும், 5,000 ரூபாய் அபராதம் விதித்து, கூடுதல் அமர்வு நீதிபதி மோனிகா நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் சக்திவேல் ஆஜராகினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை