உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உழவர் பயிற்சி நிலையம் விவசாயிகளுக்கு பயிற்சி

உழவர் பயிற்சி நிலையம் விவசாயிகளுக்கு பயிற்சி

பென்னாகரம், பென்னாகரம் தாலுகாவிற்கு உட்பட்ட கொட்டவூர் கிராமத்தில், உழவர் பயிற்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு கிராம அளவிளான பயிற்சி நடந்தது. பயிற்சியை தர்மபுரி மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் தேவி தொடங்கி வைத்து பேசுகையில், வேளாண் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, உற்பத்தியை அதிகரிக்க செய்யவும், மண் பரிசோதனை அதன் முக்கியத்துவம், பயிர் விளைச்சல் போட்டி பற்றியும் விளக்கினார்.உதவி தோட்டக்கலை அலுவலர் வசந்த குமார், தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும், பட்டு வளர்ச்சி துறை சார்ந்த திட்டங்கள் பற்றியும், மீன் வளத்துறையின் மாதேஷ், மீன்வள துறை சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கினார். பயிற்சியில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ