வரட்டாறு தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமது-ரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சித்தேரி மலையில் இருந்து, தடுப்பணைக்கு நீர்வரத்து வருகிறது. இதிலிருந்து, திறந்து விடப்படும் நீரால், தாதரவலசை, கீரைப்பட்டி, கெளாப்-பாறை, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 25 ஏரிகள் நிரம்பும். இந்நிலையில், அரூர் மற்றும் சுற்று வட்டார பகு-திகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ-மழை பெய்து வருகிறது. இதனால், வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து வரத்துவங்கியது. கடந்த, 18ல் தடுப்பணையில் மொத்த கொள்ளள-வான, 34.45 அடியில், 31 அடிக்கு நீர்மட்டம் இருந்-தது. நேற்று முன்தினம் அதிகாலை முதல், பகல், 12:30 மணி வரை, அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்தது. குறிப்பாக, சித்தேரி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் தடுப்-பணை நிரம்பியது. தொடர்ந்து, தடுப்பணையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வரட்டாற்றில் செல்கிறது. கடந்தாண்டு, போதிய மழை இல்லா-ததால் தடுப்பணை நிரம்பவில்லை. நேற்று முன்-தினம் பெய்த கனமழையால், 2 ஆண்டுகளுக்கு பின் தடுப்பணை நிரம்பியுள்ளது. தற்போது தடுப்-பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் வரட்டாற்றில் சென்று, வாணியாற்றில் வீணாக கலக்கிறது. இதை தடுக்கும் வகையில், தடுப்ப-ணையில் இருந்து, ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட, உடனடியாக நடவடிக்கை வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.