6ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தர்மபுரி: தர்மபுரி, ஆர்.டி.ஓ., காயத்ரி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட விவசாயிகளுக்காக மாத முதல் வெள்ளிக்கிழமையில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்-படி, வரும் 6ல், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்-தியின் அறிவுறுத்தலின்படி, விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடக்கிறது. அன்று காலை, 11:00 மணிக்கு, தர்ம-புரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடக்கும் கூட்-டத்தில், தர்மபுரி வருவாய் கோட்டத்துக்கு உட்-பட்ட வட்டார விவசாயிகள் பங்கேற்கலாம். இவ்-வாறு, அதில் தெரிவித்துள்ளார்.