உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சூளகிரியில் தீயணைப்பு நிலைய அறிவிப்புவிவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வரவேற்பு

சூளகிரியில் தீயணைப்பு நிலைய அறிவிப்புவிவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வரவேற்பு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திலும் பலமுறை மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், சூளகிரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் அமைக்கப்படும் என, கடந்த சில நாட்களுக்கு முன் சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி, மத்திய மாவட்ட செயலாளர் சீனிவாசன், கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் தலைமையில், சூளகிரி தாலுகா அலுவலகத்தில் நேற்று திரண்ட விவசாயிகள், அதை வரவேற்றும் தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை