உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆய்வோடு நின்ற பொம்மிடி ஆணைமடுவு அணை திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

ஆய்வோடு நின்ற பொம்மிடி ஆணைமடுவு அணை திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

பாப்பிரெட்டிப்பட்டி, அ பொம்மிடி ஆணைமடுவு அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் தருமபுரி மாவட்டம், பொம்மிடியிலிருந்து, 7 கி.மீ., தொலைவில் ஏற்காடு மலை அடிவாரத்தில் ஆணை மடுவு அமைந்துள்ளது. ஏற்காடு மலையில் பெய்யும் மழை நீர், மலைகளில் உருவாகும் ஊற்று நீரை கொண்டு உருவாகும் வேப்பாடி ஆறு, ஆணை மடுவு பகுதியில் தேங்குகிறது.ஆண்டு முழுவதும் நீர்வரத்து உள்ள ஆணை மடுவு பகுதியில் ஆங்கிலேயர்களால் சிறிய தடுப்பணை கட்டப்பட்டது. ஆணை மடுவு அணைக்கட்டு திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என, 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.கடந்த, 2004ல் அணை கட்டுவதற்கான ஆய்வு நடந்தது. அதன் பிறகு, 20 ஆண்டு களாக நடவடிக்கை எதுவும் இல்லை. ஆய்வோடு இப்பணி நின்று விட்டது. வேப்பாடி ஆற்றில் அணைகள், அணைக்கட்டுகள், எதுவும் இல்லாததால் அங்கிருந்து பிரிந்து, பாம்பாற்றின் வழியாக சேலம் மாவட்டம் கே.என்.புதுார், ஆர்.எம்.நகர் ஏரிகளுக்கு சென்று ஏரிகள் நிரம்பி தொப்பையாறு அணைக்கு செல்கிறது.ஆகவே ஆணைமடுவு வேப்பாடி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டால் பொம்மிடி, பில் பருத்தி, துரிஞ்சிப்பட்டி, சாலவளசு, வைரனுார், வாசிகவுண்டனூர், கேத்திரெட்டிப்பட்டி, ஜாலியூர், பி.பள்ளிப்பட்டி அய்யம்பட்டி உட்பட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 10,000 ஏக்கர் பாசன வசதி பெறும். இதன் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வாய்ப்பு உருவாகும். எனவே ஆணைமடுவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ