உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மரவள்ளி தோட்டங்களுக்கு நீர் விலைக்கு வாங்கும் விவசாயிகள்

மரவள்ளி தோட்டங்களுக்கு நீர் விலைக்கு வாங்கும் விவசாயிகள்

பாப்பிரெட்டிப்பட்டி:கடும் வறட்சி நிலவுவதால், தோட்டங்களில் நட்டுள்ள மரவள்ளி கிழங்கு குச்சிகளுக்கு, விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில், 3,705 ஏக்கர்; கடத்துார், மொரப்பூர் வட்டாரத்தில், 8,645 ஏக்கரிலும் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு குச்சி நடவு செய்துள்ளனர்.தற்போது கிணறுகள் வறண்டுள்ளதால், டிசம்பரில் நடவு செய்த மரவள்ளிக்கிழங்கு குச்சிகள் கோடை வெயிலின் தாக்கத்தால் கருகும் நிலைக்கு சென்றுள்ளது. ஏப்., மே மாதங்களில் அடிக்கும் வெயிலில் கிழங்கு குச்சிகளை காப்பாற்றி விட்டால், பிறகு ஜூன் மாதங்களில் மழை பெய்தால் கிழங்கு குச்சிகள் வளர்ந்து விடும். தற்போது அடிக்கும் வெயிலில் இருந்து, கிழங்கு குச்சிகளை காப்பாற்ற, பொம்மிடி, வேப்பிலை பட்டி, தாளநத்தம், தென்கரைகோட்டை, குருபஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் கிழங்கு குச்சிகளுக்கு, தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகின்றனர்.இதுகுறித்து, கேத்துரெட்டிப்பட்டி காளிக்கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி மணிவேல் கூறியதாவது:எங்கள் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடப்பட்ட குச்சிகள், கிணற்றில் நீரின்றி, பட்டு போவதும், கருகி போவதுமாக உள்ளது. இதனால் வாரத்தில், 2 நாட்கள், 1,500 ரூபாய்க்கு ஒரு டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி, குச்சியை காப்பாற்றி வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை