மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு
20-Jul-2025
தர்மபுரி, தர்மபுரி அடுத்த, மூக்கனுாரில் ஆங்கிலேயர் காலத்தில் பயன்பாட்டில் இருந்த, ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி, மூக்கனுார் கிராம பொது நலச்சங்கத்தினர் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர், நேற்று மூக்கனுார் பஸ் ஸ்டாபில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக பேசினார். தொடர்ந்து, வி.சி., மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன், தர்மபுரி மாவட்ட மைய செயலாளர் பாண்டியன், உட்படபல்வேறு அரசியல் கட்சியினர் பேசினர். இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் கோரிக்கை குறித்து, மனுவாக வழங்க அறிவுறுத்தினார்.ஆங்கிலேயர் காலத்தில், மூக்கனுாரில் ரயில்வே ஸ்டேஷன் இருந்தது. தற்போதும் இங்கு, 29 ஏக்கர் நிலம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் புதிய இடத்தில் ரயில்வே ஸ்டேஷன் அமைக்க நிலம் கையகப்படுத்தி, பண இழப்பை ஏற்படுத்தக்கூடாது. மூக்கனுாரில் மீண்டும் ரயில்வே ஸ்டேஷன் அமைக்கும் வரை, போராட்டம் தொட ரும் என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மதிகோன்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
20-Jul-2025