உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குடிபோதையில் தகராறு செய்த மகனை அடித்து கொன்ற தந்தை

குடிபோதையில் தகராறு செய்த மகனை அடித்து கொன்ற தந்தை

பென்னாகரம்: ஒகேனக்கல்லில், குடிபோதையில் தகராறு செய்த மகனை அடித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே ஊட்டமலையை சேர்ந்தவர் முருகன், 59. இவரது மகன் சந்தோஷ், 32. இருவரும் பரிசல் ஓட்டிகள். சந்தோஷ் மனைவி சிவரஞ்சனி. தம்பதிக்கு தஷ்வந்த், 3, என்ற மகனும், பிறந்து, 2 வாரங்களே ஆண் குழந்தையும் உள்ளது. சிவரஞ்சனிக்கு, குழந்தையுடன், தன் தாய் வீடான ஏமனுாரில் உள்ளார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, சந்தோஷ் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும், அவரது தந்தை முருகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி புரண்டு சண்டை போட்டுள்ளனர். சந்தோஷ், தந்தை முருகனை மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றுள்ளார். சண்டை முற்றிய நிலையில், முருகன் இரும்பு கம்பியால் மகனை தாக்கியுள்ளார். இதில், சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அப்போது வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய, அவரது தாய் சுசீலா, மகன் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின், உறவினர்கள் உதவியோடு சந்தோஷை மீட்டு, 108 அவசர கால ஆம்புலன்ஸ் மூலம், பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவர் உயிரிழந்தார். ஒகேனக்கல் போலீசார், முருகனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ