உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வனப்பகுதியில் குப்பை கொட்டியவருக்கு அபராதம்

வனப்பகுதியில் குப்பை கொட்டியவருக்கு அபராதம்

அரூர் :அரூர் குரங்குபள்ளம் வனப்பகுதியில், மொரப்பூர் வனத்துறையினர், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அரூர் பகுதியை சேர்ந்த தனியார் துணிக்கடையிலிருந்து வெட்டப்பட்ட மீதமுள்ள துணிகள் மற்றும் குப்பை வீசப்பட்டு இருந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்ததில், அரூரை சேர்ந்த இளையபாரதி என்பவருக்கு சொந்தமான துணிக்கடையில் இருந்து, கொண்டு வந்து கொட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து துணிக்கடைக்கு, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை