பழைய இறைச்சி வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்
தர்மபுரிதர்மபுரி உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் மற்றும் தர்மபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர், தர்மபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிக்கரை, டீக்கடை பஸ் ஸ்டாப், மாதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், பேக்கரி, மளிகைக்கடைகள், துரித உணவகங்கள், இறைச்சி கடைகள், குளிர்பானம், பழக்கடைகள் மற்றும் பால் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். அப்போது, விதிமுறைகளை மீறிய மூன்று உணவகங்கள், ஒரு பேக்கரி ஆகியவற்றிற்கு, தலா, 1,000 ரூபாய் வீதம், 4,000 ரூபாய், அதேபோல், பழைய இறைச்சி மற்றும் நிறமூட்டி கலந்த இறைச்சிகள் வைத்திருந்த துரித உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடி ஆகிய இரண்டுக்கும் உடனடி அபராதம் தலா, 2,000 ரூபாய் வீதம், 4,000 என, மொத்தம், 8,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.