நிரம்பிய பாம்பாறு அணை வெள்ள அபாய எச்சரிக்கை
நிரம்பிய பாம்பாறு அணைவெள்ள அபாய எச்சரிக்கைஊத்தங்கரை, டிச. 2-ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதி மற்றும் அருகே திருப்பத்துார் மாவட்டம், ஜவ்வாது மலை பகுதிகளில், 'பெஞ்சல்' புயலால் தொடர் மழை பெய்கிறது. இதனால், ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 3,345 கன அடியாக அதிகரித்துள்ளது. 19.6 அடி உயர அணையில் தற்போது 18.6 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளதால், அணை பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உபரி நீரான 3,345 கன அடி நீர், 5 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.இதனால், பாம்பாறு ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ, துணி துவைக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.