மேலும் செய்திகள்
அரங்கநாதர் கோயிலில் ஆவணி அவிட்ட வைபவம்
10-Aug-2025
தர்மபுரி, தர்மபுரி டவுன் அருணாச்சல அய்யர் சத்திரத்தில், ஆவணி அவிட்டத்தை ஒட்டி, பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நேற்று காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தமிழ்நாடு பிராமணர் சமாஜம், தர்மபுரி மாவட்ட கிளை சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு, வேதமுறைப்படி, பூணுால் மாற்றிக் கொண்டனர். அதேபோல், தர்மபுரி கடைவீதி, பாப்பாரப்பட்டி, இண்டூர், பாலக்கோடு, காரிமங்கலம் ராமர் கோவில், பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில், பூணுால் மாற்றும் வைபவம் நடந்தது.* பிராமணர்கள் சங்கத்தின் சார்பில், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை சங்கரமடத்தில் ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பிராமணர்கள் சிறப்பு பூஜை செய்து, காயத்ரி மந்திரங்களை சொல்லி, கணபதி ஹோமம் நடத்தி, தங்களின் பழைய பூணுாலை எடுத்து விட்டு புதிய பூணுாலை அணிந்து கொண்டனர். தொடர்ந்து யஜூர் வேதங்களை படித்தனர். * விசாலாம்பிகை, காசி விஸ்வநாதர் ஆலயத்தில், வாணியர் சமூகத்தினர் ஒன்று கூடி ஆவணி அவிட்டம் என்னும் பூணுால் பண்டிகையை கொண்டாடினர். கோயில் அர்ச்சகர் பாலாஜி ராம், கணபதி ஹோமம் செய்ய அனைவரும் பூணுால் மாற்றி கொண்டனர்.]
10-Aug-2025