உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பயன்பாட்டிற்கு வந்த தரைப்பாலம்

பயன்பாட்டிற்கு வந்த தரைப்பாலம்

அரூர் :தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில், தென்பெண்ணையாற்றின் நடுவில் சென்னியம்மன் திருப்பாறை உள்ளது. இப்பாறைக்கு செல்லும் வகையில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 37 லட்சம் ரூபாய் மதிப்பில், தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தரைப்பாலம் மற்றும் அது குறித்த கல்வெட்டினை அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அரூர் அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, அரூர் நகர செயலாளர் பாபு மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி