உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி காலமானார்

தர்மபுரி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி காலமானார்

தர்மபுரி :தர்மபுரி தொகுதி, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி, 89, உடல் நலக்குறைவால் நேற்று காலை, 10:00 மணிக்கு காலமானார். சின்னசாமி, 1971, 1984 மற்றும், 1989 நடந்த தேர்தல்களில், தர்மபுரி தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்தார். இவர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது, 15 ஆண்டுகள், தி.மு.க., மாவட்ட செயலாளராக இருந்தார்.முதல்வர் இரங்கல்சின்னசாமி மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், '1971, 1984 மற்றும், 1989 ஆகிய தேர்தல்களில், தர்மபுரி தொகுதியில், தி.மு.க., சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்றவரும், தர்மபுரி மாவட்டத்தின் முன்னாள் தி.மு.க., செயலாளருமான சின்னசாமி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவர், 3 முறை தர்மபுரி எம்.எல்.ஏ.,வாக இருந்து, மாவட்ட வளர்ச்சிக்கு பெரும் பணிகளை ஆற்றியவர். மூத்த முன்னோடியாக, தி.மு.க.,வின் முதுபெரும் உறுப்பினராக இருந்து, நமக்கு வழிகாட்டிய சின்னசாமியின் மறைவு தர்மபுரி மக்களுக்கும், தி.மு.க.,வுக்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ