மேலும் செய்திகள்
டிரைவர் வெட்டிக்கொலை; எலக்ட்ரீஷியன் கைது
27-Nov-2024
13 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவளர்ப்பு தந்தை போக்சோவில் கைதுதேன்கனிக்கோட்டை, டிச. 22-கெலமங்கலம் அருகே, சிறுமியை கர்ப்பமாக்கிய வளர்ப்பு தந்தையை, போக்சோவில் போலீசார் நேற்று கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த பச்சப்பனட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 27 வயது கூலித்தொழிலாளி, எச்.செட்டிப்பள்ளியிலுள்ள செங்கல்சூளையில் பணியாற்றி வந்தார். இவர், கணவரை இழந்து, ஒரு ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ள ஒரு பெண்ணை, 2வது திருமணம் செய்தார். அதன்பின் அப்பெண்ணுக்கு, 3 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்பெண்ணின் முதல் கணவருக்கு பிறந்த, 13 வயது சிறுமி, கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதித்திருந்தார். கெலமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, டாக்டர்கள் பரிசோதித்ததில் அச்சிறுமி, 6 வார கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இது குறித்து, கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புகார் செய்தார். மாவ ட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். விசாரணையில், வளர்ப்பு தந்தையான கூலித்தொழிலாளி, அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரிந்தது. அவரை போலீசார் போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.
27-Nov-2024