இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்
அரூர், நவ. 6- அரூரில், 40க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. இங்கு சேகரமாகும் கோழி இறகுகள், குடல் உள்ளிட்ட இறைச்சி கழிவுகள், நடேசா பெட்ரோல் பங்க் முதல், அரூர் பெரிய ஏரி வரை சாலையோரம் கொட்டப்படுகின்றன. இதனால், அங்கு கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியே நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் மூக்கை மூடிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.மேலும் துர்நாற்றம் வீசுவதால், குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகின்றனர். நாய்கள் உணவுதேடி சுற்றித் திரிந்து, சண்டையிட்டு சாலையில் நுழைகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே இறைச்சி கழிவுகளை அகற்றுவதுடன், மீண்டும் இங்கு கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.