உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு சிறுமியை இழுத்து சென்ற தந்தை உட்பட 4 பேர் கைது

இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு சிறுமியை இழுத்து சென்ற தந்தை உட்பட 4 பேர் கைது

தர்மபுரி, தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்கில் பாதித்த சிறுமியை, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, பரிசோதனை முடியாததால் சிறுமியை, தர்மபுரி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் நேற்று முன்தினம், 10ல் இரவு, 9:45 மணிக்கு தங்க வைத்தனர். அவருடன் சிறுமியின் அத்தை, தர்மபுரி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி, போலீசார் தாமரைசெல்வி, கலையரசி ஆகியோர் பாதுகாப்பாக இருந்தனர். அங்கு, ஆனந்தி, 34, என்பவர் பணிபுரிந்து வருகிறார். அன்றிரவு அங்கு, 45 வயதுள்ள சிறுமியின் தந்தை உள்ளிட்ட, 4 பேர் அத்துமீறி உள்ளே நுழைந்து, சிறுமியை தங்களுடன் வர அழைத்தனர். அப்போது, சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை முடியவில்லை, ஒத்துழைப்பு கொடுங்கள் என, அவர்களிடம் ஆனந்தி கூறியுள்ளார். அதற்கு சிறுமியின் தந்தை உள்ளிட்ட, 4 பேரும் ஆனந்தி, இன்ஸ்பெக்டர் புஷ்பராணி மற்றும் பெண் போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கி விட்டு, சிறுமியை அழைத்துச் சென்றனர். இது குறித்து ஆனந்தி புகார் படி, சிறுமியின் தந்தை உள்ளிட்ட, 4 பேரை நேற்று, தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை