உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 100 மாணவியருக்கு இலவச கல்வி பச்சமுத்து குழும தலைவர் அறிவிப்பு

100 மாணவியருக்கு இலவச கல்வி பச்சமுத்து குழும தலைவர் அறிவிப்பு

தர்மபுரி ;தர்மபுரி மாவட்டத்தில், புளி வணிகத்தில் கட்டமைப்புகளை உருவாக்கி, அரசு சார்பில் புளி வணிக மையம் அமைப்பதற்காக ஏற்பாடுகளை மேற்கொண்டார். இவரது சாதனைகளை விளக்கி 'பாஸ்கர் தி அதிசய மேன்' என்ற புதிய நுால் வெளியீட்டு விழா, தர்மபுரி மாவட்டம், குண்டலபட்டியில் உள்ள, பச்சமுத்து மகளிர் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.ஓய்வு பெற்ற கலெக்டர் சண்முகம் தலைமை வகித்தார். பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர் சசிகலா பாஸ்கர், துணை தலைவர்கள் சங்கீத்குமார், அரங்கநாதன், இயக்குனர்கள் சங்கீதா புஷ்பசேகர், பிரியா சங்கீத்குமார், இன்னிசை அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோகனதுர்கா வரவேற்றார். நுால் தொகுப்பாசிரியர் சிகரம் சதீஷ் 'பாஸ்கர் தி அதிசய மேன்' நுாலின் சிறப்பம்சங்கள் குறித்து பேசினார். புலவர் ஞானசம்பந்தம் நுாலை வெளியிட்டார். இதில், தர்மபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறைக்கு, 50,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன.பச்சமுத்து குழும நிறுவனங்களின் தலைவர் பாஸ்கர் பேசுகையில்,''தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழை மாணவர்களை ஆண்டுக்கு, 25 பேர் வீதம் எல்.கே.ஜி., முதல், 8ம் வகுப்பு வரை, 10 ஆண்டுகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தில் கல்வி வழங்கப்படும். அதேபோல், பெற்றோரை இழந்த, 100 ஏழை மாணவியருக்கு எங்கள் கல்லுாரியில் கல்வி கட்டணம், விடுதி கட்டணம் உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். அறக்கட்டளை மூலம், மருத்துவம் படித்த மாணவர்கள் பணிபுரிய விரைவில், பல்நோக்கு மருத்துவமனை கட்டப்படும்,'' என்றார்.பள்ளி, கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள், புளி வணிகர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !