மேலும் செய்திகள்
கால்நடை மருத்துவர் தின விழா
27-Apr-2025
அரூர்: அரூர், அரசு கால்நடை மருத்துவமனையில், உலக கால்நடை மருத்துவ தினத்தையொட்டி, வெறி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் கனகசபை தலைமை வகித்தார். அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் முகாமினை துவக்கி வைத்தார். இதில், 50க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது. மேலும், செல்லப்பிராணி வளர்ப்போருக்கு வெறிநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. முகாமில், கால்நடை மருத்துவர்கள் பூபாலன், சக்திவேல், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
27-Apr-2025